9. ஏனாதிநாத நாயனார்

அமைவிடம் :temple icon.enathinathar
வரிசை எண் : 9
இறைவன்: பிரமபுரீஸ்வரர்
இறைவி : கற்பகாம்பாள்
தலமரம் : ?
தீர்த்தம் : ?
குலம் : ஈழக்குலச்சான்றோர்
அவதாரத் தலம் : ஏனநல்லூர்
முக்தி தலம் : ஏனநல்லூர்
செய்த தொண்டு : அடியார் வழிபாடு
குருபூசை நாள் (முக்தி பெற்ற மாதம்/நட்சத்திரம்) : புரட்டாசி - உத்திராடம்
வரலாறு : சோழ நாட்டில் எயினனூர் என்னும் தலத்தில் ஏனாதி நாயனார் அவதரித்தார். அரசர்களுக்கு வாட்பயிற்சி அளித்து அதில் கிடைக்கும் பொருளில் சிவனடியார்களை ஆதரித்து வந்தார். தொழில் ரீதியாக அவரிடம் பொறாமை கொண்ட அதிசூரன் என்பவன் அவரை நேர்மையான முறையில் வெல்ல முடியாமல் சூழ்ச்சியால் வெல்ல நினைத்தான். சிவச்சின்னமான திருநீற்றுக்கு மிகுந்த மதிப்பளிக்கும் நாயனாரை, திருநீறணிந்து அதனைக் கேடயத்தால் மறைத்து அவரோடு போரிட்டான். அவரை வெல்ல இயலாத நிலையில் போர் புரிந்துகொண்டே தன் முகத்தை மறைத்திருந்த கேடயத்தை விலக்க அவன் நெற்றியில் திருநீற்றைக் காணுகிறார் நாயனார். திருநீறணிந்தவரைச் சிவமாகவே பாவித்து அவனோடு போரிடாமல் நிற்கிறார். அச் சமயத்தைப் பயன்படுத்திகொள்கிறான். நாயனாரும் சிவபதவி அடைகிறார்.
முகவரி : அருள்மிகு. பிரமபுரீஸ்வரர் திருக்கோயில், எனநல்லூர் (மருதநல்லூர் வழி)– 612402 கும்பகோணம் வட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 07.00 – 12.00 ; மாலை 04.00 – 08.00
தொடர்புக்கு : திரு.அழகேசன்
எயினனூர்
அலை பேசி : 9751734599

இருப்பிட வரைபடம்


வாளின் படை பயிற்றி வந்த வளம் எல்லாம் 
நாளும் பெரு விருப்பால் நண்ணுங் கடப் பாட்டில் 
தாளும் தட முடியும் காணாதார் தம்மையுந் தொண்டு 
ஆளும் பெருமான் அடித் தொண்டர்க்கு ஆக்குவார்

    	           - பெரிய புராணம் 611
பாடல் கேளுங்கள்
 வாளின் படை


Zoomable Image

நாயன்மார்கள் தலவரிசை தரிசிக்க   பெரிய வரைபடத்தில் காண்க